“விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”.
திருநாவுக்கரசர் பெருமான்:
விறகில் உராய்வு தன்மை உண்டானால் அஃதிலிருந்து உஷ்ணம் ஏற்பட்டு தீயாக வெளிப்படும். பாலை தயிராக்கி கடைந்தால் அஃதிலிருந்து வெண்ணை உண்டாகி அது உருகி நெய்யாக வெளிப்படும்…
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்-:
விறகில் தீ எவ்வாறு மறைந்துள்ளதோ, பாலில் நெய் எவ்வாறு மறைந்துள்ளதோ, அவ்வாறே அரிதிலும் அரிதான, மாணிக்கத்திற்கு ஒப்பான, மானுடப் பிறவி கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு தேகத்தினுள்ளும் சிவபெருமான் ‘மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்’ மறைய நின்றுளன்…
உறவு கோல்நட்டு:-
அவன் வெளிப்பட வேண்டுமெனில்?இத்தேகத்திலும் உராய்வு என்பது ஏற்படவேண்டும். ஒவ்வொருவர் தேகத்தோடும் சதா உராய்ந்து, உஷ்ணத்தை ஏற்படுத்துவது ‘வாசி’ எனப்படும் மூச்சுக் காற்றே! இடைவிடாது இத்தேகத்தோடு எப்போதும் கூடியிருக்கும் உறவு என்பதும் இவ்-வாசியேதான். இஃதினையே சிவத்துடன் இணைக்கும் உறவுக் கோலாக, திருவாசியாக ஸத்குருவின் அருளால் மாற்றி நட்டு…

உணர்வு கயிற்றினால்:-
“ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே”
என்பது திருமூலரின் திருமந்திரம்.
அதாவது இந்த தேகத்தை பற்றி நிற்கின்ற ‘உணர்வு’ என்னும் மந்திரக் கயிற்றால்…

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே:-
திருவாசியாக மாற்றி நட்ட உறவு கோல் எனும் மத்தினை கொண்டு, உள்ளும் புறமுமாக கடைந்தால் அவன் ஜோதியாக வெளிப்பட்டு நம் முன்னே நிற்பான்…

மேலும் எவ்வாறு தீயாகா வெளிப்பட்டப் பின் மீண்டும் விறகாக மாற இயலாதோ, நெய்யாகா உருகிய பின்னர் மீண்டும் பாலுக்கு மாற இயலாதோ, அவ்வாறே சிவஜோதி வெளிப்பட்டப் பின் மீண்டும் தேகமாக (மற்றொரு பிறவியாக) உருவெடுக்காது.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏