“I” is the name of Shiva”

அப்பர் பெருமான் அருளிய நான்காம் திருமுறை!
“சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்-
அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும்ஆகில், அவன்தனை யான்
பவன் எனும் நாமம் பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால்,
இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே”!

“சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்”-
‘சிவன்’ என்னும் நாமத்தை முறையாக சொல்பவர்கள் எவராயினும் அவர்கள் அத்துணை பேரையும் ‘தாமாகவே’ ஆக்கிக் கொண்ட செம்மேனிப் பெருமான்…

“அவன் எனை ஆட்கொண்டு அளித்திடும்ஆகில்”-
அவன் என்னையும் ‘தாமாகவே’ ஆக்கிக்கொண்டு, கருணை
செய்திடுவான் ஆகில்…

“அவன்தனை யான் பவன் எனும் நாமம்”-
அவன் தாமாகவே என்னையும் ஆக்கிக் கொண்டதால் புதியதாக உண்டான (பவன்: என்பதற்கு புதியதாய் உண்டாவது என்று பொருள் உள்ளது) ‘யான்’ என்னும் ‘ஒருமையில் பன்மையின் தன்மை’ கொண்ட புதிய நாமத்தால்…
“பிடித்துத் திரிந்து பல்-நாள் அழைத்தால்”-
சிக்கென பிடித்துக்கொண்டு, அங்கும் இங்கும் எங்குமாய் அவனுடனேயே திரிந்து பல்-நாள் அழைத்தால்….
“இவன் எனைப் பல்-நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே”!
இவன் என்னைப் பலநாளாக அழைத்தலைத் இடைவிடாது தவறாது செய்கிறான் என்று, திருவுள்ளம் பற்றி அடியேற்குக் காட்சி வழங்குவான் என்பதாக அப்பர் பெருமான் சொல்லிய இப்பாட்டின் பொருளாகக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment