திருவாசகம் “பிடித்த பத்து”-10
“துன்பமே, பிறப்பே, இறப்பொடு, மயக்கு, ஆம் தொடக்கு எலாம், அறுத்த நல் சோதி! இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே”?
‘இன்பத்தை’ பற்றி உபநிஷத் வாக்கு. எது அளவு கடந்தது அதுவே இன்பம்; அல்பத்தில் இன்பமில்லை. அளவு கடந்ததை தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு மணிவாசகப் பெருமான் சிவபெருமானை ‘இன்பமே’ என்னும் சொல்லால் துதித்துப் பாடியுள்ளார்.
இப்பிரபஞ்சம் என்பது எல்லையற்றது விரிந்து கொண்டே போவது. பிரபஞ்ச வடிவே சிவலிங்க வடிவம். “மானுடர் யாக்கை வடிவு சிவலிங்கம்” என்பது திருமூலரின் திருமந்திர சொல். “உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச் சிவமே” என்பது வள்ளல் பெருமானின் அருட்பெருஞ்ஜோதி அகவல் வாக்கு. அதாவது அரிதிலும் அரிதான மானுட வடிவம் கிடைக்கப்பெற்ற உயிர்த் திரள்கள் யாவும் ஒன்றே, அவையாவும் ‘இன்பமே’ எனும் ‘சிவமயமாகவே’ இருந்துகொண்டு இருக்கிறது.
எனினும் ‘இயல்பான இன்பவடிவாகவே’ இருக்கவேண்டிய மானுட வடிவம் கொண்ட இவ்வுயிர்த் திரள்கள் யாவும், தவறாக துன்பக்கடலில் மூழ்கி சிக்கித் தவிப்பதாகவே, தம்மை உணரக்காரணம் ‘மாயப் பிறப்பு’ எனும் இப்பிறப்பே!
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி ஆன ‘நல் சிவஜோதியால்’ இம்மாயப் பிறப்பிலிருந்து அறுபட்ட மணிவாசகப் பெருமான், தம்மைப் போன்றே இவ்வுலகிலுள்ள உயிர்த் திரள்கள் யாவும் இம்மாயப் பிறப்பிலிருந்து ‘நல் சோதியால்’ அறுபட்டு, அவைகள் தம் இயல்பான இன்பவடிவான சிவவடிவு பெற வேண்டுமென தாம் பெற்ற அளவுகடந்த இன்ப உணர்வையே…

” இன்பமே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”? என்பதாக மணிவாசகப் பெருமான் சொல்லிய இப்பாட்டின் பொருளாகக் கொள்ளலாம்.
“யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்” என்று திருமூலரும்,
“உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க” (1590)
என்று வள்ளல் பெருமானும் இவ்வாறே தம் இறைவனிடம் விண்ணப்பிக்கின்றனர்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏