அப்பர் பெருமான் அருளிய:தேவாரம்.
“என்னில் ஆரும்எனக்கு இனியார்இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்
என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்துபுக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”.
“என்னில் ஆரும்எனக்கு இனியார்இல்லை
என்னிலும் இனியான் ஒருவன் உளன்”
அப்பர் பெருமான் சிவசிந்தனையைத் தவிர புறசிந்தனைக்கு தம் உள்ளத்தில் இடம் கொடாததினால் இனிமை உள்ளவராக எவருமே அப்பர் பெருமானுக்கு இருக்க இயலாது. அப்படிப்பட்ட அப்பர் பெருமான் உள்ளத்திலும், அவரைக் காட்டிலும் இனிமை கொண்டவராக ஒருவன் இருந்து கொண்டிருக்கிறான், அவன் யாரெனின்?
என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்துபுக்கு
என்னுளே நிற்கும் இன்னம்பர் ஈசனே”.
அப்பர் பெருமான் தம் தேகத்துள்ளே ‘உயிர்ப்பாய்’ தம் உள்மூச்சாகவே கண்டுணர்ந்த சிவ ஜோதியானது தம் புறத்திலும், அதாவது தம்தேகம் வெளிப்படுத்திய வெளி மூச்சுப் பிரகாசித்திலும் அதே சிவஜோதியானது ‘இன்னம்பர் ஈசனாக’ மீண்டும் காணப்பெற்றதால்….
போந்துபுக்கு: போந்து என்றாலும், புக்கு என்றாலும் காணுதல் என்று ஒரே பொருள்தான், எனினும் இருமுறை அப்பதத்தை அப்பர் பெருமான் பயன் படுத்தியதற்கு காரணம், தம்முள்ளில் கண்ட சிவத்தையே புறத்திலும் ‘இன்னம்பர் ஈசனாக’ மீண்டும் காணப்பெற்றதால்!
அவனே அப்பர் பெருமான் உள்ளத்தில் ‘இனியான்’
என்று அவன் ஒருவனாகவே வீற்றிருக்கிறான்.
திருச்சிற்றம்பலம்🙏

