திருஞானசம்பந்தர் தேவாரம்:
வானமர் தீவளி நீர்நிலனாய்
வழங்கும் பழியாகும்
ஊனம ரின்னுயிர் தீங்குகுற்ற
முறைவாற் பிறிதின்றி
நானம ரும்பொரு ளாகிநின்றான்
றிருநாரை யூரெந்தை
கோனவ னைக்குறு கக்குறுகா
கொடுவல் வினைதானே. 3949.
பொ-ரை: ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது.
அதாவது உயிர் தெய்வத்தன்மை கொண்டதாக இருந்தபோதிலும்
“நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக பற்றியிழுக்கின்றன” என்று பகவத் கீதை: ஸாங்கிய யோகம்:60 ல் ஶ்ரீ கிருஷணர் கூறிய படி,
“நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாக பற்றியிழுக்கின்றன” என்று பகவத் கீதை: ஸாங்கிய யோகம்:60 ல் ஶ்ரீ கிருஷணர் கூறிய படி,
பஞ்ச பூதங்களின் திரிபான இவ்வுடம்புடன் கூடியதால் உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாக மாறியுள்ளது. அக்குற்றங்களிலிருந்து உய்தி பெற ஒரே வழி,
‘நான் அமரும் பொருளாகி நின்றான்’ ?
இங்கு ‘நான்’ என்று இவ்-உயிரையே ஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுகிறார். அதாவது அதுகால் வரையில் பஞ்சபூத சம்பந்தம் கொண்ட இவ்வுடம்பையே தம் இருப்பிடமாகக்கி அமர்ந்திருந்த உயிர்…
இங்கு ‘நான்’ என்று இவ்-உயிரையே ஞானசம்பந்தப் பெருமான் குறிப்பிடுகிறார். அதாவது அதுகால் வரையில் பஞ்சபூத சம்பந்தம் கொண்ட இவ்வுடம்பையே தம் இருப்பிடமாகக்கி அமர்ந்திருந்த உயிர்…
திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற தந்தையும், தலைவனுமாகிய பெருமான் ‘அமரும் பொருளாக’ அவனருளால், அவனை சரணடைந்ததால் மாறும் போதுதான், ‘நான்’ என்னும் இவ்-உயிர் இனிய உயிராக, தெய்வத் தன்மை உடையதாக, சிவமாகவே ஆகின்றது. அத்தகைய உயிருடன்(சிவத்துடன்) மெய் (இவ்வுடம்பு) கலக்கக் கலக்க, இதன் பழிக்கும் தன்மைகளும் மறைந்து இம்-மெய்யும் சிவமாக, ஞானசம்பந்தப் பெருமான் பெற்ற பேற்றினை யாவருமே பெறலாம்.
திருச்சிற்றம்பலம்🙏
திருச்சிற்றம்பலம்🙏