திருவாசகம்/சிவபுராணம்-4

“உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற”
திருவாசம்: சிவபுராணம்

பதப்பொருள் :
உய்ய – நான் உய்யும்படி, என் உள்ளத்துள் – என் மனத்தில், ஓங்காரம் ஆய் நின்ற – பிரணவ உருவாய் நின்ற,

விளக்கம் :
ஓம் என்ற ஒலி அ, உ, ம் என்ற மூன்று ஒலிகளாய்ப் பிரியும். அம்மூன்றும் முறையே படைத்தல், காத்தல், அழித்தலாகிய முத்தொழில்களையும் குறிக்கும்.
மணிவாசகப் பெருமானின் திரு உருவம் ஓங்காரதின் ‘அ’ வென்னும் அகார ஒலியாக இறைவனால் முன்னரே படைக்கப்பட்டு விட்டது. படைக்கப்பெற்ற அத் திருவுருவம் உய்யும்படி,

(‘உய்யக்கொண்டான்’ என்பது இறைவனின் ஓர் திருநாமம். இதற்குப் ‘பிழைக்குமாறு அருள் செய்தவன்’ என்று பொருள்)

“ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”.
என்னும் சிவவாக்கியரின் பாடல்: 369 படி

அழித்தலாகிய ‘ம்’ வென்னும் மகார ஒலி மாறுகொண்டு (உய்யக்கொண்டு) காத்தாலாகிய ‘உ’ வென்னும் நுண்ணிய உகார ஒலியாக (‘ஆய்’ என்பதற்கு நுண்ணிய என்று பொருள் உள்ளது) மணிவாசகப் பெருமானின் உள்ளத்தில் கலந்து நிற்க, அதாவது ஓம் எனும் பிரணவ ஒலியின் மூன்று மாத்திரைகளான அ, உ, ம், ல் அழிக்கும் தன்மை கொண்ட மகார ஒலி, அகார உகார ஒலிகளில் மறைந்து….

அ, உ, வும் படைத்தலாகவும் காத்தலாகவும் அதாவது அண்ணாமலையார் யாகவும் உண்ணாமுலையம்மை யாகவும் ‘உய்ய உள்ளத்துள் நிற்க’ கண்டபின் போற்றிப் பாடிய மற்ற வரிகள்…

மெய்யா! விமலா! விடைப் பாகா! வேதங்கள்
“ஐயா” என, ஓங்கி, ஆழ்ந்து, அகன்ற, நுண்ணியனே!
திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment