“ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும்
தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”.
சிவவாக்கியர் பாடல்: 369
ஆம் ‘அழித்தல்’ என்னும் தன்மை கொண்ட ‘சிவம்’ மடிய வேண்டும். அத்தன்மை மடிந்தால்தான், ‘சிவம்’ அருளாக மாறி சிவனருளாக வெளிப்படும். அதாவது அழிக்கும் தன்மைகொண்ட ‘சிவம்’ அருளுடையதாக மாற வேண்டுமெனில்…
அதாவது அழிக்கும் தன்மைகொண்ட சிவத்தை அருளுடையதாக ஆக்க, சிவமானது இடைவிடாது அழைக்கப்பட்டுக் கொண்டே (பூஜிக்கப்பட்டுக் கொண்டே) இருக்க வேண்டும். அத்தகைய பூஜைனைக்குரிய இரகசியத்திலும் இரகசியமான சித்த புருஷர்கள் பயன் படுத்திய வார்த்தையே மாறு கொண்ட ‘ஹூ’ என்னும் மந்திரச் சொல்.
ஸத்குருவின் அருள் சித்திக்கின் மாறு கொண்ட ‘ஹூ’ வால் இடைவிடாது சிவத்தை வழிப்பட்டு, அழிக்கும் தன்மைகொண்ட சிவத்தை காக்கும் தன்மை கொண்டதாக மாற்றி, மரணம் நம்மை நெருங்கா வண்ணம் காத்துக் கொள்ளலாம்.
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்
சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்
சிவனரு ளால்வினை(மரணம்) சேரகி லாமை
சிவனருள் (மாறு கொண்ட ‘ஹூ’ )
கூடிற் சிவலோக மாமே.
சாய்ராம்.

