You Are That! – “பஞ்சாட்சரம்”

திருஞானசம்பந்தர் தேவாரம்:

“துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே”.

மெய்ப்பொருள்:
துஞ்சுதல்: என்பதற்கு தூங்குதல் என்று பொருள்.
துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்:

தூங்கும்பொழுதும், தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் பஞ்சாட்சர மந்திரத்தை நினைத்துப் போற்றுங்கள் .


விழித்திருக்கும் பொழுது, இடைவிடாது பஞ்சாட்சர மந்திரத்தை மனதாலும், வாக்காலும் நினைத்துப் போற்றலாம். ஆனால் தூங்கும்பொழுது மனம், வாக்கு இரண்டும் அடங்கியே இருக்குமே, பின் எவ்வாறு தூங்கும்பொழுதும் திருஐந்தெழுத்தை நினைப்பது?

பகவத் கீதையில் தியான யோகம் ஸ்லோகம் 17ல்:
“மிதமாய் உண்டு உடற்பயிற்சி செய்பவனுக்கு, அளவுடன் கர்மங்களைச் செய்து, உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுக்கு யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறது”. என்று தூங்கும்பொழுதும் , விழித்திருக்கும் பொழுதும் , ‘நமசிவாய’ என்னும் இப்-பஞ்சாட்சர மந்திரத்தை இடைவிடாது கூறுவதை ‘வாசியோகம்’ என்றே கீதை கூறுகிறது.

அதாவது தூக்கம், விழிப்பு என்னும் இவ்விரண்டு நிலைகளிலும் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் ‘வாசி’ யில் இவ்-திருஐந்தெழுத்தை முறைப்படி பொருத்தி ‘திருவாசி’யாக, சி(வாசி)வா என்று சதா போற்றியபடியே இருந்தால்..,

மார்க்கண்டேயரின் உயிரை அவருக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் இறுதியில் கவர வந்த கூற்றுவனை உதைத்து காத்தது போல், நம்மையும் இவ்- திருஐந்தெழுத்து காத்தருளுமாமே!
“கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்” (குறள் 269)
[அறத்துப்பால், துறவறவியல், தவம்]

திருச்சிற்றம்பலம்🙏

Leave a comment