You Are That! – “Infinite Merciful”

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு
ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும்-ஏற்றவர்க்கு
நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.
அவையாரின் நல்வழி:9
பொதுப் பொருள்:

ஆற்றில் வரும் மழைவெள்ளத்தின் வரத்து அற்றுப்போயிற்று. ஆற்று மணல் நடப்பவரின் காலடியைச் சுடுகிறது. அப்படிப்பட்ட

காலத்திலும் ஊற்று வெள்ளம் வந்து உலகுக்கு நீரை ஊட்டும். நல்ல குடியில் பிறந்த மேன்மக்களும் அப்படித்தான். தம் செல்வத்தை இழந்து வறுமையில் வாடினாலும் மனம் ஒப்பி இல்லை என்று சொல்லமாட்டார்கள்.
மெய்ப்பொருள்:

ஆற்றுப் படுகையிலிருந்து கிடைக்கும் நீர் ஒருக்காலும் இல்லாமல் போவது கிடையாது. அதாவது ஆற்றின் மேல் பகுதியில் மழை வெள்ளத்தின் வரத்து அற்றுப் போகும் முன்பே அந்நீரினை தம்முள் உறிஞ்சி, பின் அஃதினையே ஊற்று வெள்ளமாக மாற்றி எக்காலத்தும் இல்லையெனாமல் உலகுக்கு எவ்வாறு நீரை ஊட்டுகின்றதோ…
அதுபோல பெரும் அருட்செல்வத்தை தன்னகத்தே கொண்ட சான்றோர்கள் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னரும், இனி வரும் காலங்களிலும் அருள் வேண்டி தம்மை நாடி வருபவர்களுக்கெல்லாம்…
இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்’ அவர்கள் இரக்கும் முன்பே ஆற்றின் ஊற்று வெள்ளம் போல அருளை வாரி வழங்கி கொண்டேயிருப்பார்கள்.

இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்
இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ”
வள்ளலாரின் திருவருட்பா:

சாய்ராம்.

Leave a comment