“தத்துவ நிலைகளைத் தனித்தனி திரையால்
அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி”
“திரைமறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே
அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:830
அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம், இஸ்லாம் மாரக்கம், கிறிஸ்துவ மார்க்கம் போன்ற இவைகள் யாவுமே தத்துவ நிலைகள். எனினும் இத் தத்துவங்களின் மெய்பொருள் என்பது ஒன்றேயாம்!
‘மெய்’ என்பதற்கு உண்மை, உயிர், உடம்பு என்று பொருள்கள் உள்ளது. அதாவது ஒரே மெய்ப்பொருளை கொண்ட இத் தத்துவநிலைகளை மனிதஉருவம் அல்லது உடம்பு என்னும் தனித்தனி திரையால் மறைத்து, அதன் உண்மையான ஆற்றல் அல்லது மெய்ப்பொருள் விளங்காவண்ணம் செய்யும் அருட்பெருஞ்ஜோதி….
‘சன்மார்க்கம்’ என்னும் ஒரே உயிர் தத்துவநிலையின் மூலம் அத் திரைமறைப்பெல்லாம் நீக்கி, மெய்ப்பொருளை விளங்கச் செய்து‘ஆங்காங்கே’ அதாவது மற்ற எல்லா தத்துவ நிலைகளுக்குள்ளும் ஜோதியாக இருந்து அரசாட்சி செய்து கொண்டிருப்பதும் அருட்பெருஞ்ஜோதியே!

