Mundakopanishad says : “Brahman is not grasped by the senses as it is subtle and infinite, but is realised by the intellect purified through knowledge and meditation.”
மகான் ஷ்ரிடி சாய்பாபாவின் உபதேசம்:
“நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதேபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும். இதை உணர்ந்ததுகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னை காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வவியாபாகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்”.
நிர்குண பிரம்ம தத்துவத்தை நிலைநாட்ட வந்த ஶ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாளின் உபதேசதிற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டாக இன்றும் இருந்துகொண்டு இருப்பவர் மகான் ஷ்ரிடி சாய்பாபா. அதாவது அறிவுக்கு அறிவாய் விளங்குபவரை அறியாமை கொண்டு அறிய இயலவே இயலாது.
He is distinct from the known, from the whole manifested universe and from the unknown, too.
சாய்ராம்.


