“கந்தன் கருணை”

“கந்தன் கருணை”

‘கந்து’ என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி’ என்று பொருள் உள்ளது. உயிர்கள் என்னும் யானைகளை மாயையிலிருந்து மீட்டு அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர் ‘கந்தன்’ ஆனார். ‘கந்து’ என்ற சொல்லுக்கு ‘பற்றுக்கோடு’ என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால் அவர்கள் பிறவிச்சுழலில் இருந்து மீள்வார்கள்.

ஆகையால் ‘கந்தன்’ என்பதற்கு ‘இணைப்பை ஏற்படுத்துதல்’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது இருவேறு இணையாத தன்மைகள் கருணையால் ஒன்றன இணைந்தால் அதுவே கந்தன் கருணை ஆகின்றது !

ஈஸாவாஸ்ய உபநிஷத்: 1:5
அது அசைவுள்ளது ; (எனினும்) அசைவதில்லை ;
அது தூரத்திலுள்ளது ; (எனினும்) ஸமீபத்திலுள்ளது ;
அது அனைத்திற்கும் உள்ளே இருப்பது ; (எனினும்)
அனைத்திற்கும் அப்பால் உள்ளது என ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி விளக்குகின்றது இவ் உபநிஷத் !

அதாவது ஏகமயமான ஆத்ம ஸ்வரூபத்தை இருவேறு தன்மை கொண்டதாகவே ஈஸாவாஸ்ய உபநிஷத் விளக்கி காட்டியுள்ளது. ‘அசைகிறது எனினும் அசையாதது ‘ என்பது போல தோன்றும் இவ் இருவேறு இணையாத தன்மைகளை…

எவ்வாறு அசுரனாகிய சூரபத்மனை அழிக்காமலேயே தேவர்களையும் காத்து சூரபத்மனுக்கும் அருளினாரோ அவ்வாறே இணையாத இவ் இருவேறு தன்மைகளையும் “இருக்கிறது” என்னும் பிரம்ம மந்திரக்கயிற்றல் இணைத்து ‘ஒன்றாய்’ உணரச்செய்யும் மிகப்பெரும் கருணைமிகு திறனை கந்தபெருமான் கொண்டுள்ளதால் அஃது தனித்த கந்தனின் கருணையாகவே என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது.
வெற்றிவேல் 🙏

Leave a comment