“பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர்”.
அதிகாரம்: அவையஞ்சாமை
:குறள்:723
பொதுப்பொருள்:
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.
மெய்ப்பொருள்:
ஒருவருக்கு பகைவர் உள்ள போர்க்களத்தில் சாகத்துணியும் அஞ்சாமை ஏற்பட காரணமாவது, அவர்தம் வீரத்தின் அளவையும், பகைவரின் வீரத்தின் அளவையும் மிகத்துல்லியமாக தீர்மானித்து அத்தகையவருக்கு அக்கணத்தில் அறிவிக்கும் அறிவே ஆகும். இஃது பொதுவென வெளிப்படும் அறிவாகையால் அஞ்சாமை என்பதும் எவரிடத்தும் ஏற்படும்.
ஆனால் அறிஞர்கள் நிறைந்த அவைகளத்தில்…
“எச்சபை பொதுஎன இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி.”(100)
என்று வள்ளல் பெருமான் தம் அகவலில் பாடியுள்ளப்படி,
அறிஞர்கள் நிறைந்த அச்சபையில் தம்மூலமாகவும் வெளிப்படும் அறிவியல் ஆற்றல் யாவுமே ஒன்றென, பொதுவென இறையருளால் உணரவல்லவருக்கு மட்டுமே…
அறிஞர்கள் நிறைந்த அக்-களத்தில் மிகத் துணிவுடன் தெளிவாக பயமின்றி


