“அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
பண்டமும் காட்டிய பரம்பர மணியே”
(அகவல்:1291)
அண்டம் எனப்படுவது ஒளிக்குள் அடங்கப்பெற்றது. அருட்பரகாச வள்ளலாரின் தேகம் முழுவதும் ஒளியுறுவமே!
இவ்-அண்டத்தில் காணப்படும் மற்றும் அறியப்படும் அனைத்து விதமான ஆற்றல்களையும், ஒளியுறுவான வள்ளளாரின் அண்டமயமான தேகத்துக்குள்ளும் காட்டிய…
பரம்பர: வழிவழியாய் வந்த மணியே!!
வள்ளலார் பெற்ற இவ் அனுபவத்தை ஓர் புராணக்கதை வாயிலாகவும் அறியலாம்…
“ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவிக்க, யசோதை கிருஷ்ணனிடம் வாயைத் திறந்துகாட்டு என்று கூற, கிருஷ்ணன் தன் பவளவாயைத் திறந்து காட்டினான். குழந்தை கிருஷ்ணன் வாய்க்குள் மண் இருக்கிறதா என்று பார்த்த யசோதைக்கு அதிசயம் காத்திருந்தது. சின்னஞ்சிறிய அந்தப் பவள வாய்க்குள் அண்ட சராசரங்களும் தெரிந்தன. அஷ்டதிக்குப் பாலகர்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், தீவுகள், அஷ்ட நாகங்கள், தேவர்கள், மூவர்கள், முனிவர்கள், சித்தர்கள், மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் உட்பட உலகிலுள்ள அனைத்தும் தெரிந்தன”!!!


