You Are That! -“light source”

“அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே”

(அகவல்:901)

1. வேதத்தின் மகாவாக்கியம் தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि)

தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய்,
அல்லது ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ என்றும் சொல்லலாம்.

2.அஷ்டாவக்ர கீதை:2:2

நானொருவனே இவ்வுடலை ஒளிர்விப்பது போன்று
இவ்வுலகையும் ஒளிர்விக்கின்றேன்.
அதுவே அதுவாய்:

‘அது’ என்பது வேதவாக்கியத்தின் பொருளான ‘அது’ என்னும் அருட்பெருஞ்ஜோதியே!

மெய்,வாய், கண், காது, மூக்கு என்னும் ஐம்புலன்களை கொண்ட இவ்வுடல் ஒளிர்வது ‘அது’ என்னும் அவ்-ஒளியாலே! ஆகவே இவ்வுடலும் ‘அது’ வாக,

அதுவே அதுவாய்’ ஆகிறது
“பொன்னுடம்பு எனக்குப்பொருந்திடும் பொருட்டா
என்னுளம் கலந்த என்தனி அன்பே”

(அகவல்:1489)

அதுவினுள் அதுவாய்:

இவ்வாறு ஒளிர்யூட்டப்பட்ட ‘அது’ என்னும் இச்-ஜோதிர் தேகத்தில்,

‘அது’ வாக, ஜோதியாக, ஜோதியுள் ஜோதியாய்,

“அதுவினுள் அதுவாய்” விளங்கிக்கொண்டிருப்பதும்

‘அது’ என்னும் அருட்பெருஞ்ஜோதியே …

“ஊக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்

ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:13)

பொதுவினுள் நடிக்கும்:

இவ்வாறு ஒன்றேயாய் விளங்கிக் கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதி, பற்பல உருவம் கொண்ட எண்ணிலடங்காத ஜீவராசிகளாய், ஒவ்வொன்றுக்கும்

தனித்தனி ஒலிக்குறிகளாக, தனித்தனி குணங்களாக தனித்தனி நிறங்கள் கொண்ட வடிவங்களாக, பொதுவினில் தோற்றமும் மறைவுமாக, மாறிமாறி அதாவது இருப்பது போன்றும் பின் அதுவே இல்லாதது போன்றும், இடைவிடாது நடித்துக் கொண்டிருந்தாலும்…

“ஊர்வன பறப்பன உறுவன நடப்பன

ஆர்வுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:693)

பூரணப் பொருளே:

‘அது’ அருட்பெருஞ்ஜோதி மாறுபாடு அற்ற பரிபூரண ஒளியாய், தோற்றத்திற்கு அப்பால், சதா ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.

“தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின்

ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி”

(அகவல்:833)
சாய்ராம்.

Leave a comment