“God is light”

“God is light”
Quote:
தமிழ் மற்ற மொழிகளிலிருந்து வேறுபடுகிறதா? ஆய்வில் கிடைத்த பல தகவலில் முத்தான ஒன்று இதோ👇
ஏனைய மொழிகள் எல்லாம் மதம் சார்ந்து முதற் பொருளாகக் கடவுளைக் காட்டி நிற்கையில் தமிழோ மதசார்பற்ற மொழியாக இன்றைய அறிவியல் பேசும் முதற்பொருளினை அன்றே தொல்காப்பியத்தில் படம் பிடித்துக் காட்டியது.
“முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின்
இயல்பென மொழிபமொழிப இயல்புணர்ந் தோரே” (4)
அதாவது,
முதற்பொருள் என்பது உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும் (Space ) பொழுதும் (Time ) ஆகும்` என இந்தத் தொல்காப்பிய நூற் பாவானது குறிப்பிடுவது இன்றைய அறிவியல் சொல்லும் space -time- volume என்பதன் அடிதளமல்லவே.
Unquote:
‘முதல்’ என்பதிர்க்கும் முன்னமே உள்ளது ‘ஆதி’ என்பது
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதியை”
என்று மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையிலும்,
“ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளல் பெருமானும்,
இறைவனை ஜோதி வடிவாக கண்டு பாடியுள்ளனர்.
அதாவது,
உலகம் தோன்றிய காலம் முதல் இருக்கும் நிலமும் (Space ) பொழுதும் (Time ) ஆகிய இவற்றுக்கும் முன்பே ‘ஆதியாய்’ விளங்கிக்கொண்டிருப்பது ஒளி வடிவான அருட்பெருஞ்ஜோதியான இறைவனே. இவ்-ஒளி வேகத்தில்,
space -time- volume என்னும் இம்மூன்றும் பூஜ்ஜிய நிலையே என்பதும்
அறிவியல் சொல்லும் அடிதளமல்லவே.
சாய்ராம்.

Leave a comment