You Are That! -“Stable person”

“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து”.

குறள்:155: அதிகாரம்: பொறையுடைமை

பொதுப்பொருள்:
தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர்
ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
மெய்ப்பொருள்:
‘வினாச காலே விபரீத புத்தி’ என்பது பழமொழி.
‘விநாச காலே’ என்பது கெட்ட காலத்தை குறிப்பது.

உண்மையில் கெட்ட காலம் என்று ஒன்று இல்லை. மாறாக ஒருவர் புத்தியில் பேதலிப்பு ஏற்படும் தருணம் தீமையுடைய செயல்களும் நல்லவை போன்றே தென்படும். இஃதினில் ஈடுபட்டு தீமைகளை அனுபவிக்கும் தருணம், புத்தியில் மீண்டும் தெளிவு ஏற்பட்டு, “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்றுணர்ந்த்து தம் தீங்கிற்கு தம்மையே பொறுப்பாளியாக்கி அமைதி காத்தால்? பெரியாரால்

பொன்போன்று போற்றப்பட்டு அத்தீங்கினின்று விரைவில் மீட்கப்படுவார்கள்.

அஃதின்றி புத்தியில் தெளிவு பெறாது போனால், தாம் அனுபவிக்கும் தீங்கிற்கு ஏனையோரை காரணமாக்கி அமைதி இழந்து அவர்களை தண்டிக்க முற்பட்டு, பெரியோர்களின் அவமதிப்புக்குள்ளாகி அத்தீங்கினின்று விடுபட முடியாமல் தத்தளித்துக் கொண்டேயிருப்பார்கள் என்பதாக பொருள் கொள்ளலாம்.

சாய்ராம்.

Leave a comment