“பெண்திறல் புறத்தும் ஆண்திறல் அகத்தும்
அண்டுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி”.
அருட்பெருஞ்ஜோதி அகவல்: (711)
‘திறல்’ என்பதிர்க்கு ஊக்கம் என்றும்,
‘அண்டு’ என்பதிர்க்கு பொருந்துதல் என்றும் பொருள் உள்ளது.
அதாவது பெண்ணின் புறவடிவின் வழியே ‘ஊக்கமாக’
வெளிப்படும் அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றல், ஆணின் அகத்தினுள் மனவலிமையாக பொருந்துகிறது.
அதுபோன்று ஆணின் அகத்தினுள் மனோதிடமாக உருவாகும் அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றல், பெண்ணின்
புறத்தோற்றத்தில் ஊக்கமாகவும் பொருந்துகிறது.


