You Are That! – “Energy source”

“தேவிஉற்று ஒளிர்தரு திருஉருஉடன் எனது
ஆவியில் கலந்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல் (200)

‘தேவி’ என்னும் சொல் ‘சக்தியை’ குறிப்பது.
அனைத்தையும் ஒரே சக்தியாக உற்று நோக்கிய தன்னுள் ஒளிரும் திருஉருஉடன், எனது ஆவியில் கலந்து ஒளிர்க என்று

அருட்பெருஞ்ஜோதியை வள்ளல் பெருமான் துதித்து போற்றுகிறார்.

தைத்திரீயோபநிஷத்து- 3:10:2ல் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது உள்ளது.

பிரம்ம சக்தியே, பாதுகாப்பாக ஒவ்வொருவரது வாக்கில் உளதென்றும், ஒவ்வொருவரது பிராண அபான சக்திகளில் யோகத்தை அளிப்பதாகவும், ஒவ்வொருவரது கைகளில் செயலாகவும், ஒவ்வொருவரது கால்களில் நடையாகவும், எருக்குழியில் ஒவ்வொருவரின் மலப்போக்காகவும்,பிரம்ம சக்தியே உளதென்று உபாசிக்க வேண்டும்.

இந்த பிரம்ம சக்தியையே ‘தேவி’ என்று வள்ளலார் சுட்டிக்காட்டியுள்ளார். அதுபோல அனைத்தையும் தேவியின் (பிரம்ம சக்தியின்) செயலாகவே உற்று நோக்கினால், நம்முள்ளே ஒளிரும் தெய்வ தன்மை கொண்ட திருஉருஉடன் நம் ஆவியும் கலந்து அருட்பெருஞ்ஜோதியாக ஒளிரக் காணலாம்.

“தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே

என்னை மேலேற்றிய இனிய நற்றாயே”
அருட்பெருஞ்ஜோதி அகவல்

Leave a comment