“கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.”
கண்ணோட்டம்: குறள்-577
“காட்சியுங் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:
“It’s unseen,but seeing. There is no other seer but he”
என்று பிருஹதாரணியகோபநிஷத்து: 3-7-23 ல் சொல்லப்பட்டுள்ளது.
அதாவது ஒவ்வொரு உருவினுள்ளும் ஊடுருவி ஆட்சி செய்து கொண்டிருக்கும் உயிராகிய ஒளியே அவ்வுருவின் கண்களுக்கு
காட்சியை அளிக்கிறது. எனினும் அவ்வுயிர் காட்சிக்கு
அப்பாற்பட்டதாகவே இருக்கிறது.
கண்களின் வழியாக பார்த்து அறியும் அறிவுக்கு அறிவொளியாய்
விளங்குவது தம் உருவினுள் குடிகொண்டிருக்கும் தம் உயிரொளியே
என்னும் உணர்வோடு இருத்தலே வள்ளுவர் குறிப்பிடும் “கண்ணோட்டம்”
ஆகும். இத்தகைய “கண்ணோட்டம்” மிக்க அறிவுக்கண்களோடு கூடி வாழ்பவரின் கண்களில் இயல்பாகவே இரக்கமும் அருளும் நிரம்பியிருக்கும். இவர்களே கண்ணுடையவர்கள் ஆகிறார்கள்.
இத்தகைய “கண்ணோட்ட அறிவு” இல்லாத கண்களோடு கூடி இருப்பவர்கள், இரக்கம் மற்றும் அருள் அற்றவர்களாகி கண் இருந்தும் இல்லாதவர்களாய் கருதப்படுவார்கள்.
சாய்ராம்.


