“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.”
வாழ்க்கை துணை நலம்: குறள் 52:
பொதுப்பொருள்:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும்
பயன் இல்லை.
மெய்ப்பொருள்:
பகலில் இல்லாதது போல் தோன்றும், வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் இரவில் பிரகாசிக்கும். நட்சத்திரங்களின்
பிரகாசம் ஒருபோதும் குன்றுவதில்லை,மாறாக பகல், இரவு மாற்றங்களினால் தான் இருப்பது, இல்லாதது போன்று தென்படுகிறது. அது போல…
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இயல்பாகவே
இருந்தபோதிலும், பகல் போன்று இல்வாழ்க்கை தவிர மற்ற யாவற்றையும் சிறப்புடையதாக கருதும் கணவனின் கண்களுக்கு, மனைவியின் நற்பண்புகள் எதுவுமே தென்படாது…
மாறாக இரவின் இருளைப்போன்று, இல்வாழ்க்கையின் முன்பு வேறு எதையுமே சிறப்புடையதாக கருதாத கணவனின் கண்களுக்கு மனைவியின் நற்பண்புகள் அனைத்தும் தென்படும். மேலும் இத்தகைய கணவன்மார்களுக்குத்தான் வாழ்க்கை துணைநலமாக அமையும்!
சாய்ராம்.


