You Are That! – “The soul purifier”

“புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்”

(அதிகாரம்:வாய்மை குறள் எண்:298)


பொதுப்பொருள்:

நீரால் உடம்பின் வெளிப்புறமும் வாய்மையால் அதன்

உட்புறமும் தூய்மை பெறும்.
மெய்ப்பொருள்:

நீரால் ஒருவர்க்கு கிட்டிய உடம்பின் வெளிப்புற தூய்மையை, அடுத்தவர் தம் புறக்கண்கள் மற்றும் நாசி நறுமனத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும். ஆனால் வாய்மையால் ஒருவர் பெற்ற அகத் தூய்மையை அத்தகையவரின் புறக் கண்கள் மற்றும் மற்ற பொறிவாயில் வழியாக வீசும் ஒளியை உணர்வதின் மூலமே அடுத்தவர்கள் அறிய இயலும்.

சாய்ராம்.

Leave a comment