“பிரபஞ்சம்” என்பது பிரம்ம சக்தியின் ( The origin of energy ) பிரதிபலிப்பேயாம். இப்பிரபஞ்சத்தில் 84 லட்சம் ஜீவராசிகள் உள்ளதாக ஆதி சங்கரர் தம் விவேகசூடாமணியில் கூறியுள்ளார். இவை அனைத்துமே ஒரே பிரம்ம சக்தியின் அம்சமே ஆகும்.
பகவத்கீதை: விபூதி யோகம்:அத்தியாயம் -10
நானே.உயிர்களின் ஆதியும் இடையும் இறுதியும் நானே(20)
“The law of conservation of energy states that energy can neither be created nor destroyed – only converted from one form of energy to another.”
அதாவது தோற்றமாக நாம் காணும் அனைத்து ஜீவராசிகளும் மானுடப்பிறப்பு உள்பட, வேறு எது ஒன்றினாலும் உருவாக்கப்படவோ அல்லது அழிக்கப்படவோ இல்லை. மாறாக கர்ம வினைகளுக்கு ஒப்ப வெவ்வேறு வடிவங்களில் மானுடப்பிறப்பு உள்பட மாறி மாறி தோன்றிக்கொண்டே இருக்கிறது, முடிவு என்பதே இல்லாமல்….
எனினும்,மானுடப்பிறப்பு ஒன்றுக்கு மட்டும் விதிவிலக்கு அருளப்பட்டுள்ளது.
“Instead of changing from one form of energy to another, if desired, can combine or dissolving the appearance into the origin of energy.” அதாவது வெவ்வேறு வகைவகையான வடிவங்களாக, மாறி மாறி பிறந்து கொண்டிருக்கும் மற்ற ஜீவராசிகளின் சக்தியாக இல்லாமல்….
ஒன்று மாறாத, மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டேயிருக்கும் மற்ற 84 லக்ஷம் ஜீவராசிகளுக்குள் தானும் ஒன்றாகி அவைகளை போன்றே எல்லா வகையான பிறப்புக்களாகவும், தானும் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டிருக்கலாம்….
அல்லது திருவாசக வாக்கின் படி,
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்.
என்று அவைகளினின்று விடுபட்டு, ப்ரஹ்ம சக்தி உதித்த இடத்திலேயே ( The origin of energy ) ல், ஓடுங்கப்பெற்று, மீண்டும் மீண்டும் பிறவாத பெரும்பேற்றை எய்தலாம் !
அதாவது எவ்வாறு கடலிலேயே உருவான உப்பு பதுமை அதன் இடைவிடாத கெட்டித்தன்மையால், தாம் உருவான அக்கடலில் கரையாமல் வேறு வேறு உருவங்களில் மாறி மாறி அதே கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளது போல இல்லாமல்….
ஒளிக்கும் பராசக்தியின் திருவருளால், உப்பு பதுமைக்கு ஒத்த பஞ்சபூத கலவையில் உருவான இம்மானுட தேகத்தின் கெட்டித்தன்மை முழுவதும் இப்பிறவிலேயே அற்றுப்போய், ஆதி மூலமான, ப்ரஹ்ம சக்தியான கடலிலேயே இரண்டற கலக்கலாம்.
“உதித்த இடத்தில் ஒடுங்குதலே ஞானமாம்”- பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி
சாய்ராம்.


