அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே”!
ஒளவையார் கூறும் இத்தகைய பெருமை மிக்க மானுடப்பிறப்பு
ஒரு உயிருக்குகிடைக்க வேண்டும் எனின், இறையருள் பரிபூரணமாக அருளப்பட்டிருக்க வேண்டும். அதாவது அருட்பெருஞ்ஜோதியின் அருளால் ஒவ்வொரு உயிருக்கும் கிட்டிய இம் மானுடஉருவம் முழுவதுமே அருள் வடிவாம்! இஃதினை சுட்டிக்காட்டவே அருட்பரகாச வள்ளலார் தம் அகவலில்,
அருளே நம்மியல் அருளே நம்உரு
அருளே நம்வடிவாம் என்ற சிவமே
அருளே நம்அடி அருளே நம்முடி
அருளே நம்நடு ஆம் என்ற சிவமே
அருளே நம்மறிவு அருளே நம்மனம்
அருளே நம்குணமாம் என்ற சிவமே
இவ்வாறு பாடியுள்ளார். ஒவ்வொரு மானிட இயல், உருவம்,
தனித்தனி வடிவம்,அடி, முடி, மற்றும் நடு, அறிவு, மனம், குணம்
என்னும் இவையெல்லாம் அருட்பெருஞ்ஜோதியின் அருளால்…அருளாகவே பிரகாசித்ததுக் கொண்டிருக்கிறது.
அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே!
அதாவது இம்மானுட உருவில் ஏற்படும் ஒவ்வொரு அசைவும் அருட்பெருஞ்ஜோதி அருளின் அசைவே! அவ் அருள்
இல்லையெனின் சுவாசம் கூட இயங்காது.
அருளே நம்குலம் அருளே நம்இனம்
அருளே நாம் அறிவாய் என்ற சிவமே
இப்பெறும் பேற்றை, இவ் அருளை அறிந்த குலம் அனைத்துமே
ஓர் குலம். அறிந்த இனம் அனைத்துமே ஓர் இனம். அறியப்பட்ட
இவ் அருளறிவே அருட்பெருஞ்ஜோதி!
அருள் வடிவு அதுவே அழியாத் தனிவடிவு
அருள்பெற முயலுகென்று அருளிய சிவமே
அதுவே ஒவ்வொரு மானிட உருவின் அருள் வடிவு, அதுவே
மரணமில்லா பெருவாழ்வு பெற்ற அழியாத் தனிவடிவு ! ஆகவே அவ்வருளினை பெற அவ்வருளையே சரணடைவோம்!
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி:
Surrender to Grace: Surrender to Grace: Surrender to Grace:
சாய்ராம்.


