சிவவாக்கிய சித்தர் பாடல்கள்:
கதாவுபஞ்ச பாதகங்களைத் துரந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்துழலும் ஏழைகாள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராம ராம ராம என்னும் நாமமே (11)
செய்த பாவங்கள் யாவும் அகலவும், பஞ்சமா பாதகங்களை செய்யா வண்ணம் காப்பதற்கும் ஒதுவதற்குரிய அறிய மந்திரம் இதுவாக இருக்குமோ அல்லது அதுவாக இருக்குமோ என்று பற்பல மந்திரங்களை ஓதி உச்சரித்து வையகத்தில் வாழ்ந்து உழன்று வரும் ஏழை பக்தர்களே! இதோ சர்வ நேரந்த்திலும் சர்வ காலங்களிலும் உச்சரித்து ஒதுவ்த்ர்குரிய அறிய நல்ல மந்திரம் இதுதான் என்பதனை உணர்ந்து எப்போதும் இராம ராம ராம என்னும் நாமத்தை என்றும் மறவாது ஓதி உயர்வடையுங்கள்.
நானதேது நாயதேது நடுவில் நின்றது ஏதடா
கோனதேது குருவதேது கூறிடும் குலாமரே
ஆனதேது அழிவதேது அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது ராமராம ராம என்ற நாமமே (12)
நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது என்ன? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிடுங்கள் எமக்குள மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்று உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்.
இங்கு சிவவாக்கிய சித்தர் குறிப்பிடும்:
சர்வ நேரத்திலும், சர்வ காலங்களிலும் என்பது ஒவ்வொருவரின் உறக்கம் மற்றும் விழிப்பு என்னும் இருநிலைகளும் சேர்ந்தே என்பதே பொருளாகின்றது.
ஸ்ரீ கிருஷ்ணரும் தம் பகவத்கீதையில் தியானயோகத்தில்
“அளவுடன் கர்மங்களைச் செய்து உறக்கத்திலும் விழிப்பிலும் முறைமை வகிப்பவனுக்கு யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறது.”(17)
என்று உபதேசத்திக்கிறார்.
அதாவது விழிப்பு நிலையில் உச்சரிக்கப்படும் ராம நாமம் தடைபடாது அவரவரின் உறக்கத்திலும் உச்சரிப்புக்கு உள்ளானால் அஃது முறைமை (continuous link) வகிக்கப்பட்ட யோகமாக மாறுகிறது என்று பொருள் கொள்ளலாம். எனினும் விழிப்பு நிலையில் காணப்படும் வாக்கும், மனமும் உறக்க நிலையில் மறைந்தது போய்விடுகிறது.உறக்கம், விழிப்பு என்னும் இரு நிலைகளிலும் இயங்குவது வாசி ஒன்றே. ஸத்குருவருளால் இவ்வறிய ராம நாமம் முறையாக அவரவர் வாசி வழியே ஜபிக்கப்படின், வாசி திருவாசியாக மாறி ஸ்ரீராமருடன்அமரத்துவம் பெறலாம்.
சாய்ராம்.


