அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக!
பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19
காயத்ரி மந்திரம்:
“ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்”
பூர், புவ, ஸுவ எனும் மூன்று லோகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை மேம்படுத்தட்டும் என்ற பொருளைக் கொண்டது இந்த மந்திரம்.
அதாவது அப் பரம்பொருள் என்பதே ஒளி பொருத்திய சுடர் கடவுள். இதுவே ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே அமைந்துள்ளது. இதுவே தியானிக்கப்படும் வஸ்து.
மகான் ஷ்ரிடி சாய்பாபாவின் உபதேசம்:
“நீங்கள் தொலைதூரமோ அல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போகவேண்டாம். உங்களது நாமத்தையும், ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதேபோன்று அனைத்து ஜீவராசிகளுள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது
ஸ்தாபிக்கப் பெற்றிருக்கும் உணர்வுநிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும். இதை உணர்ந்ததுகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னை காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சிப்பீர்களானால் சர்வவியாபாகத்தை உணர்ந்து
என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்”.
முறையாக காயத்ரீ மந்திரம் இவ்வாறு தியானிக்கப்பட்டால், தியானம், தியானிப்பவர் என்னும் இவ்விரண்டும் தியானிக்கப்படும் வஸ்துவான ஒளிமயமான பரம்பொருளுடன் (சாய்நாதருடன்) ஒன்றாகும் நிலையை எய்தலாம்.
சாய்ராம்.


