You Are That!- “Known by knowledge”

“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்”

குறள் 123: அதிகாரம்: அடக்கமுடைமை.

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி
ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு
மேன்மை பயக்கும் என்பது பொதுப் பொருளாகும்.


இதில் வள்ளுவர் கூறும் அறியவேண்டியது எது என்பது

ஆராயப்படவேண்டிய ஒன்றாகும் !

“அடக்கம் அமரருள் உய்க்கும்”
என்னும் வள்ளுவரின் கூற்றுப்படி
அத்தகைய அமரத்துவத்தை அடையப்பெறும் அறிவை அறிவதே,
மானுடப்பிறப்பு எய்தப்பெற்ற யாவர்க்கும் கிடைக்கப்பெற்ற அருபெரும் சந்தர்ப்பமாகும். அவ்வாறு அறிந்து அவ் நல்வழியில் ஒழுகப்பெற்று அமரத்துவம் அடையப் பெற்றவர்கள், அதே நல்வழிதனில் நடக்க எத்தனிப்பவர்களால் மட்டுமே, அத்தகையவர்களும் மேன்மை அடையும் பொருட்டு அறியப்படுவார்கள் என்னும் பொருள்படவே வள்ளுவர் பெருந்தகை இக்குறளை நமக்கு வழங்கியுள்ளார்கள்.

அவ்வையாரின் மூதுரையும் இவ்வாறே பகர்கிறது

“நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ் சேர்ந்தாற் போல்

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் – கற்பிலா

மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்

காக்கை உகக்கும் பிணம்”.

சாய்ராம்.

Leave a comment