“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்”
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவை ஐந்தும் புலன்களேயன்றி பொறிகள் ஆகாது. பொறிகள் என்பது ஸ்பரிசித்தல், பேசுதல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்னும் ஐவகையான செயல்களே ஐம்பொறிகள் ஆகும்.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் ஸாங்கிய யோகத்தில்:(55) ல், “பார்த்தா, மனதிலெழுகின்ற ஆசைகளை யெல்லாம் அகற்றி ஆத்மாவில் ஆத்ம திருப்தி அடைந்திருப்பவன் “ஸ்திதப் பிரக்ஞன்” என்று சொல்லப் படுகிறான் என்று பகர்கிறார்.
அதாவது ஆசைகளால், புலன்கள் பொறிகளாக மாறி அதில் சிக்கி சீரழியாமல், புலன்களை தம் “சமநிலை” என்னும் ஆத்ம சொரூபத்தில் கலக்கச் செய்வதே சிறந்த யோகம் என்று நமக்கு உபதேசிக்கிறார்.
வள்ளுவர் பெருந்தகையும் ஐம்புலன்களையும், ஐம்பொறிகளின் வாயில் போட்டு அவிக்காமல், ஐம்புலன்களை தூயஉணர்வில் நிலை நிற்கச் செய்யும் வலிமை பெற்றவர்களே “ஸ்திதப் பிரக்ஞன்” ஆவார்கள் என்று இக்குறள் மூலம் கீதோ உபதேசத்திற்கு வலிமை சேர்க்கிறார். இத்தகையை தூய உணர்வு என்னும் ஸ்திதப் பிரக்ஞத் தன்மையை அடைந்தவர்களுக்கு “சமநிலை கடவுளின் உள்ளும் தெரியும், புறமும் தெரியும்”. ஏனையோருக்கு புற அலங்காரம் மட்டுமே தெரியும்.

