திண்ணியர் ஆகப் பெறின்”. குறள் 666:
பொதுப்பொருள்:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.
“எப்படி எண்ணியது என்கருத்து இங்கு எனக்கு
அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி”
-அகவல் :191
எவரொருவர்க்கு இறையருள் கூடி வருகின்றதோ, அத்தருணத்தில் தாம் விரும்பியதை தம் எண்ணங்களில் நிலைநிறுத்தி வேண்டுதல் என்பது இயலாததாய் போய்விடும். மாறாக இறையருளால் அங்கு உற்றது எதுவோ அதுவே அவர் கருத்தாக, எம்முயற்சியும் இன்றி எண்ணப்பட்டு, அதுவே அருட்பெருஞ்ஜோதியின் அருளாகவும் அருளப்பட்டு செயலாக்கம் பெறும்.
வள்ளுவர் பெருமானின் குறளும் இப்பொருள் கொண்டே அமைந்துள்ளது. அதாவது எவரொருவரின் எண்ணங்கள் தனித்துவம் உடையதாக மட்டும்
உள்ளதோ அஃ தினில் ஸ்திரத்தன்மை உருவாக வாய்ப்பில்லை. மாறாக பொதுவுடைமை கொண்ட எண்ணங்கள் மேலோங்கி எழும் தருணம்
அஃதினில் ஸ்திரத்தன்மை என்னும் இறையருளும் கூடியே வரும்.
அத் ஸ்திரத்தன்மை காரணம் உருவான அவ்வெண்ணகள் எத்தடைகள் வரினும் அவையாவற்றையும் தகர்த்து எறிந்து செயலாக்கம் பெற்றிடும். அது அநேகருக்கு பயன் தருவதாகவும் அமையும் என்னும் பொருள்பட இக்குறளை வள்ளுவர் பெருமான் உலகிற்கு ஈந்துள்ளார்.
அருட்ப்ராகாச வள்ளல் பெருமானின் பொதுநோக்கு கொண்ட உயர்ந்த எண்ணங்களும், செயலாக்கமும், அதன் மூலம் இன்றளவும் கிட்டிக்கொண்டிருக்கும் பயன்களுமே இக்குறளுக்கு சான்றெனக்கொள்ளலாம்.
“அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்”
சாய்ராம்.


