You Are That!- “The breath”

Nothing proceeds out of me ,

“எனக்கு முன் எதுமேயில்லை”.

Ashtavakra Gita – Chapter: 20
இங்கு ‘எனக்கு ‘ என்று குறிப்பிடப்படுவது ?
அவரவர் தேகத்துனுள் இயங்கும் ‘ஸ்வாசமேயாம்’.
‘ஸ்வாசத்திற்கு முன் எதுமேயில்லை’

பஞ்ச பூதங்களின் கலவையான அவரவர் தேகம், ஐம்புலன்கள், ஐம்புலன்கள் வழியே வெளிப்படும் இவ்வுலகம், இவ்வுலகியல் பொருட்கள், ஏனைய ஜீவராசிகள் இவையாவுமே ஸ்வாசத்திற்கு உட்பட்டவைகளே! ஸ்வாசத்திற்கு முன், ஸ்வாசத்திற்கு அந்நியமாக அல்லது ஸ்வாசத்திற்கு அப்பால் எதுமேயில்லை!

அதாவது வாஸ்துவத்தில் அவரவர் தேகத்துனுள் ஸ்வாசம் இயங்கவில்லை! ‘ஸ்வாசத்துனுள் தான்’ இவ்வுலகில் உள்ள 84 லக்ஷம் வகையான ஜீவராசிகளும் இயங்கிக்கொண்டிருக்கிறது! ‘ஸ்வாசத்துனுள் தான்’ வெளிப்படும் இவ்வுலகமும் இவ்வுலகியல் பொருட்களும் உள்ளது.
Ramana Maharishi says: “Space is in you. The physical body is in space, but not you.”

Following is the quote from great Sufi saint Rumi:
“Stop acting so small. You are the universe in ecstatic motion.”

“Hari Sarvothama Vayu Jeevothama” என்பது துவைத சித்தாந்தத்தின் தாரக மந்திரம். அதாவது ஸ்வாசமே ஜீவாத்மா, ஹரியே சர்வோத்தமன் என்னும் பரமாத்மா என்பதே இதற்கு பொருளாகின்றது. இதற்கு மேம்பட்ட தன்மையில் அத்வைத சித்தாந்தத்தில் ஸ்ரீ ஹரியே சர்வோத்தமன் என்னும் மூலப்பொருள். அதன் தன்மை கொண்டதாய் இருப்பது ஸ்வாசமாகிய ஜீவாத்மாவே.

அதாவது எவ்வாறு நெருப்பும் அதன் உஷ்ணமும் பிரிவற்றதாய் உள்ளதோ அதுபோல ஸ்ரீ ஹரியான சர்வோத்தமனும் அதன் தன்மை கொண்டதாய்
இருக்கும் ஸ்வாசமாகிய ஜீவாத்மனும் வெவ்வேறல்ல, ஒன்றேயாம் என்பதே அத்வைத சித்தாந்தம்.
சாய்ராம்.

Leave a comment