You Are That!- “All Praise to the LORD”

“எல்லா புகழும் இறைவனுக்கே” என்பது இறைவனுக்கேயுரிய வாசகம்!

எவ்வாறு எல்லா புகழும் இறைவனுகே உரித்தாகின்றது ?

ஆத்ம சொரூப இலக்கணம் பற்றி ரிஷி ஸ்ரீ யாக்ஞவல்கியர் அவர்களால்

ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

‘ it’s unseen, but seeing; unheard, but hearing; unperceived, but perceiving; unknown, but knowing. There is no other seer but he, there is no other hearer but he, there is no other perceiver but he, there is no other knower but he. This is thy Self, the ruler within, the immortal. Everything else is of evil.’

ஆதலின் ஆத்ம சொரூபமான ‘ப்ரஹ்மத்திற்கு’ அந்நியமாக, தனித்துவமான செயல்பாடு ஏதுமில்லை என்பதும் புலனாகின்றது. அதுபோலவே செயல்பாட்டின் பலாபலன்கள் யாவும் ‘அதற்கே’ உரித்தாகின்றது.

அதாவது “என்செய லாவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமே உன்செய லேயென் றுணரப்பெற்றேன்” என்று பட்டினத்து ஸ்வாமிகள் பாடியபடி ‘ ‘எல்லாம் அவன் செயலே ‘ என்னும் உணர்வு உள்ளவரிடமிருந்து வெளிப்படும் செயல்பாடுகள் யாவுமே ‘தெய்வ செயலாக’ புகழுக்கு உகந்ததாகவே இருக்கும். அப்-புகழும் இயல்பாகவே இறைவனுக்கே உரித்ததாகவே அமையும்.

அஃதின்றி எவரொருவர் வெளிப்படும் அச்-செயல்பாட்டினை தம் தனித்துவமாக மட்டுமே எண்ணுகிறாரோ ?

‘Whosoever looks for anything elsewhere than in the Self,

was abandoned by anything ‘.

என்னும் ரிஷி ஸ்ரீ யாக்ஞவல்கியரின் ப்ருஹதாரண்யக உபநிஷத் வாக்கிற்கேற்ப தம் தனித்துவமாக கருதப்பட்ட அச்-செயல்பாட்டின் மூலம் புகழ்ச்சிக்கு மாறாக இகழ்ச்சி ஏற்பட்டு புறம் தள்ளப்படுவார்கள்.

சாய்ராம்.

Leave a comment