“சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு”. குறள்-1024
பொது விளக்கம்:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
‘குடி’ என்பதிற்கு ‘வாழிடம்’ என்று பொருள்.
‘தம்’ என்பதிற்கு ‘மூச்சு’ என்றும் பொருள் உண்டு. ஆகவே ‘தம் குடி’ என்பது இவ்வுயிர் வாழிடமான இவ்வுடம்பே என்றும் பொருளாகின்றது.
திருமூலர் தம் திருமந்திரத்தில் அருளியபடி:
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே”.
அத்தகைய மெய்ஞ்ஞானம் பெற்ற மெய்யுடன் (மெய் என்னும் பதத்திற்கு உடம்புஎன்றும் பொருள் உண்டு) உயிர் அஃது குடிகொண்டிறிந்த மெய் ‘ஆராயமலே’ (அறியாமலே) , அம்-மெய்யுடன் உயிர் இரண்டற கலந்து உயிர்மெய் எழுத்து போல் வளரும் என்னும் மெய்ப்பொருள் பதிந்த குறளை வள்ளுவர் நமக்கு வழங்கியுள்ளார்.
சாய்ராம்.


