கட்டளை என்பது எது ?
‘நான் என்பதின் தன்மையே கட்டளையாக உள்ளது’.
பாலும் வெண்மையும், நெருப்பும் அதன் உஷ்ணமும் போல, எவ்வாறு ஒரு பொருளும் அதன் தன்மையும் பிரித்துப்பார்க்க இயலாதோ அவ்வாறே ‘நான்’ என்பதும் ‘கட்டளை’ என்பதும் பிரிக்கவே இயலாத ஒன்றேயாகும்.
இதன் நாமமே “இருக்கிறது” என்னும் அஷ்ரமயமாக உள்ளது. அதாவது ‘இருக்கிறேன் நான்’ என்னும்
இவ் அஷ்ரத்தின் கட்டளையாலேயே சர்வ இயக்கமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இஃது பஞ்சபூத சம்பந்தமற்ற ஸப்த ஸ்வரூபமாகும்.
ஏகாத்மா எனும் சப்த ப்ரஹ்மம் இதுவே. பார்பவனின் பார்வையாகவும், நினைப்பவனின் நினைவாகவும் உள்ளதுவும் இவ் அஷ்ர கட்டளையே. அனைத்து ஜீவராசிகளின் இயக்கமும் இப்பிரபஞ்சத்தின் இயக்கமும் இவ் அஷ்ர கட்டளையாலேயே.
1.The Brihadaranyaka Upanishad-THIRD ADHYAYA-EIGHTH BRAHMANA
1a. எது வானத்திற்கும், பூமிக்கும், அதற்கு அப்பாலும் குறுக்கிலும் நெடுக்கிலும் வியாபித்துள்ளது ? – கார்கி அம்மையார்
ஆகாயம் கார்கி – ரிஷி யாக்ஞவல்கியர்
1b. ஆகாயம் எதில் கோர்க்கப்பட்டுள்ளது ?
-கார்கி அம்மையார்
கார்கி அதை அழிவற்ற அக்ஷரம் என்று பகர்வார்கள். இதில்தான் ஆகாயம் குறுக்கிலும் நெடுக்கிலும் கோர்க்கப்பட்டுள்ளது. இந்த அக்ஷரத்தின் கட்டளையாலேயே சூரியனும் சந்திரனும் தம் தம் ஸ்தானங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருவன் இதை அறியாமல் எவ்வளவு யாகங்கள், தவங்கள் செய்தாலும் அவையனைத்தும் வீணே.
– ரிஷி யாக்ஞவல்கியர்
எனினும் உலகம் இவ் அஷ்ர கட்டளையை அறியாது, மாறாக பார்பவனாகவும், நினைப்பவனாகவும் நானே இருக்கிறேன் என்று, பஞ்சபூத சம்பந்தம்கொண்ட தனித்தனி உருவாய் தன்னை தானே
மீண்டும் மீண்டும் பிறப்பித்துக் கொண்டு, இப்பிறவிப் பெருங்கடலை கடக்க இயலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
‘இருக்கிறேன் நான்’ என்னும் இவ் அஷ்ரம் ஸத்குருவின் மூலமாக மட்டுமே அறியப்பட இயலும். அவ்வாறு அறியப்பட்டது விழிப்பு, கனவு, உறக்கம்
என்னும் மூன்று நிலைகளிலும் இடைவிடாது உபாசிக்கப்பட்டால், அஃது உதித்த இடத்தில் ஒடுங்கும்.
Ramana maharishi says”:
1. ‘I exist’ is the only permanent self-evident experience of everyone. Nothing else is so self-evident as ‘I am’. What people call self-evident, that is, the experience they get through the senses, is far from self-evident. The Self alone is that. So to do self-enquiry and be that ‘I am’ is the only thing to do. ‘I am’ is reality. I am this or that is unreal. ‘I am’ is truth, another name for Self.
2. ” நான் , நான் , நான் என இடைவிடாமல் கூறிக்கொண்டு இரு “இது ஒரு நாள் நிச்சயம் ஆன்மாவில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் .
” நான் ” என்பது கடவுளின் பெயர் . எல்லா மந்திரங்களைக் காட்டிலும் இதுவே முதன்மையான மிகச்சிறந்த மந்திரம்
சாய்ராம்.