You Are That!-22- ” It moves. It does not move “
” It moves. It does not move “
“அது அசைகிறது, அசைவதில்லை” -ஈஷாவாஷ்ய உபநிஷத்
ஒரு பொருளும் அதன் தன்மையும் வேறு வேறாக தென்படினும், அதாவது பால் அதன் வெண்மை, நெருப்பு அதன் உஷ்ணம் வெவ்வேறு போல் தென்படினும் இவைகள் பிரிக்கவே முடியாத ஒன்றேயாம்.
அது போலவே அசைகிறது, அசைவதில்லை என்னும் இவ்விரண்டும் பிரிவற்ற ஒன்றேயாகும். அசையா நிலையில் அஃது தூய அறிவாய் மட்டுமே மறைந்து விளங்கிக்கொண்டிருக்கும் ப்ரஹ்ம சக்தி. சலனமற்ற ப்ரஹ்ம சக்தியின் பிரிக்க முடியாத ஸ்பந்தம் என்னும் அசைவே…
எந்தவொரு பொருளும் அதன் தன்மை மூலமே அறியப்படுவது போன்று, இத்தூய அறிவும், அசைவால் அவ்வறிவுக்கு ஏற்படும் அறியும் தன்மையாலேயே அறியப்படுகின்றது. அவ்வாறு அறியப்படும் அறிவே…
ஓர் அறிவிலிருந்து ஆறு அறிவு கொண்ட மனிதன் வரை, அத்துணை படைப்புக்களையும் தன்னுள் கொண்ட பிரபஞ்சமாக, சிவமயமாய் இடைவிடாது அசைந்து ஆடிக்கொண்டே இருக்கிறது.
ஆனந்த தாண்டவம் எனும் “The cosmic dance of Nataraja with Sivagami” என்னும் படத்தைப் பார்த்தால் அது தெரியும். இதில் இப்பிரபஞ்சமயமாய் இருக்கும் ஸ்ரீ நடராஜாப் பெருமான் மட்டுமே இடைவிடாது அசைந்து ஆடிக்கொண்டே இருக்க, ப்ரஹ்ம சக்தியாய் விளங்கும்
ஸ்ரீ சிவகாமசுந்தரி அசையாமல் நிற்க காணலாம்.
“சக்தி இல்லையேல் சிவம் இல்லை” . அசையா நிலையில் இருக்கும்
தூய அறிவே சக்தி. சக்தியின் அசைவே சிவமாக, அறிவுக்கு அறியும் திறனாக, இப்பிரபஞ்சமாக, இடைவிடாது இயங்கிக்கொண்டே இருக்கிறது.
அது அசைகிறது, அசைவதில்லை என்னும் இச் சத்தியத்தை விளக்கவே
இந் ஆனந்த தாண்டவம் சிற்றம்பலத்தில்….
சாய்ராம்.


