“கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்”.
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும் என்பது பொதுப்பொருள்.
இங்கு வள்ளுவர்பெருமான் மறை பொருளாக சொல்ல வந்த கருத்து ?
ஒருவர் தன்னிடம் இருப்பவைகளை பிறருக்கு மறைக்காமல் யாசிப்பவர் யாராயினும் மனமுவந்து கொடுக்கும் சிறந்த பண்பு கொண்டவராக இருப்பினும் !
“ஏற்பது இகழ்ச்சி “ என்கிறது அவ்வையின் ஆத்திச்சுடி. அதாவது மனிதனாக பிறந்த
ஒருவன் தான் பிறந்த அதே குலத்தில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படும் இகழ்ச்சிக்கு, அம்- மனித சமூகமே பொறுப்பாகின்றது என்பதே இதற்கு பொருள். இத்தகைய ரீதியில் இல்லாதவர்கள் இருப்பவரிடம் அப்பொருளை யாசித்துத்தான் பெற்றாகவேண்டும் என்னும் நிலைக்கு தள்ளப்பட்டதால்…
அத்தகைய சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும் என்பதாக பொருள் கொள்ளலாம் !!
அவ்வாறாயின் இத்தகைய நல்லோரின் கருணையுள்ளத்தை வள்ளுவர் கருத்தில்
கொள்ளவில்லை போலும் என்பதாகவும் பொருளாகிவிடும்!
இதற்கு மாறாக இத்தகைய இருப்போர்கள் “ஐயமிட்டு உண்” என்னும் அவ்வையின் வாக்கிற்கு ஏற்ப தம்மிடம் இருப்பதை இல்லாதவர் இரந்து கேட்கும் முன்னேரே தேவையறிந்து,
அத்தகைய இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளும் (உண்ணும்) பண்பினை பெருக்கிக்கொண்டால்…
“ஏற்பது இகழ்ச்சி “ என்னும் சொல்லே மனித சமூகத்தில் இல்லாமல் மறைந்து போய்விடும் என்னும் மறைபொருளோடு இக்குறளை வள்ளுவர் நமக்கு வழ்ங்கியுள்ளர்கள்!!!
- “இரக்கின் றோர்களுக் கில்லைஎன் னார்பால்
- இரத்தல் ஈதலாம் எனல்உணர்ந் திலையோ”
- வள்ளலாரின் திரு-அருட்பா
- சாய்ராம்


