ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி” (211)
“தோற்றத்திற்கு அப்பால் உள்ளது பூரணம்
தோன்றியுள்ளதும் பூரணம்” என்பது உபநிடத வாக்கு.
சாதி,மதம்,சமயம் போன்றவைகள் தோற்றத்தில் தென்படுவைகளே !
அனாதியான தோற்றத்திற்கு அப்பால் உள்ள பூரணத்தில் இவைகள் தென்படா !!
எவ்வாறு கனவில் கண்ட காட்சிகள் நினைவில் பொய்யாகின்றதோ அவ்வாறே தோற்றத்தில் காணும் சாதி,மதம்,சமயம் போன்றவைகள் தோற்றத்திற்கு அப்பால் உள்ள ஆதியாம் பரிபூரணத்தில் பொய்பொய்யே !!!
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !!!


