You Are That!- “fearless”

யாமிருக்க பயம் ஏன்?

இது முருகப்பெருமானின் அருள் வாக்கு.

நான் என்பது தன்மையொருமைப் பெயர்

நீ என்பது முன்னிலையொருமைப்பெயர்

அவன் அல்லது அவள் என்பது சுட்டுப்பெயர்

யாம் என்பது தன்மைப்பன்மைப் பெயர்.
பயம் என்பது தனக்கு அன்னியமாக ஒன்றை காணும்போது மனதினில் உருவாகும் எண்ணங்களே. ஒவ்வொருவருக்கும் விழிப்பு ,

கனவு மற்றும் உறக்க நிலைகள் என்பது மாறி மாறி வந்துகொண்டேயிருக்கும். இதில் விழிப்பு மற்றும் கனவு நிலைகளை பற்றும் பயஉணர்வு…
ஆழ்ந்த உறக்க நிலையினில் செயலியந்தே காணப்படுகின்றது. அதற்க்கு காரணம் விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் உணரப்படும் தன்மை,முன்னிலை,சுட்டுப்பெயர் அவ்-உறக்க நிலையினில் உணரப்படுவதில்லை. அவ்வாறு அப்-பெயர்கள் உணரப்படாததின் காரணம், ஒவ்வொருவரின் இயல்பான, சத்தியமான யாம் என்னும் தன்மைப்பன்மைப் பெயர் மட்டுமே ஒன்றேயாய் அங்கு ஒளிர்ந்து கொண்டிருக்கும். அந்நிலையே திருமுருகனின் அருள்ஜோதி நிலையாகும். அங்கு பயம் என்பது தோன்றவே தோன்றாது.

ஆகவே நான்,நீ, அவன் என மாறி மாறி இடைவிடாது பிறவிதோறும் தொடர்ந்து கொண்டிருக்கும் இப்-பொய்யுணர்வை, யாம் என்னும் திருநாமத்தால் ஓவ்வொருவருள்ளும் ஒளிர்ந்து கொண்டிருக்கும் குகனான அருட்பெருஞ்ஜோதியின் அருளால் அற்றுப்போகச்செய்து…

சதா யாதுமாகி (யாம் என்றே) நின்றால், பய உணர்வு என்பது முற்றிலும் அற்றுப்போகும் . பயமற்ற இந்நிலையே முக்தியாகும்.
“நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்

போகேம் என எனைப் பொருந்திய பொன்னே”

அருட்பெருஞ்ஜோதி அகவல் (1357)

சாய்ராம்.

Leave a comment