You Are That!- “Hardihood”

 

  அஞ்சுவது யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதும் இல்லை.
:அப்பர் பெருமானின் தேவாரத் திருப்பதிகம்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்” :  என்பது
வள்ளுவர் பெருமானின் திருக்குறள்.
அஞ்சாமை என்னும் குணத்திலிருந்துதான் ‘ஊக்கம்  உருவாகின்றது. ‘அஞ்சாமை என்பது சிவமயமாகவே குடிகொண்டிருக்கும் ஒவ்வொரு மானுட உயிரின் இயல்பான தன்மையாகும். சிவனருளை அறியாததின் காரணம்அஞ்சாமைஎன்பது வெறும் மானுட உடம்பின் குணமாகவே மட்டும் கருதப்படுவதால், அதன் வெளிப்படும் தன்மையும்அவ்வுருவு அளவேதான்  இருக்கும்

ஆகவேதான் இங்கு வள்ளுவர் பெருமான் ‘யானையையும் புலியையும்‘ உவமானப்பொருளாக எடுத்துக் கொண்டுள்ளார். யானையின் ‘அஞ்சாமையின்‘  வெளிப்பாடு அது கொண்ட உருவத்தை மட்டுமே சார்ந்துள்ளதால், ‘ஊக்கமும்அதன் உருவம் அளவேதான்  இருக்கும். மாறாக புலியின் ‘அஞ்சாமையின்வெளிப்பாடு அதனுடைய உயிரின் தன்மையாக  வெளிப்படுவதால், அதன் ஆற்றல் அளவு கடந்து இருக்கும்அவ்வாற்றல் முன் யானையின் திறன் மங்கியே நிற்கும்.

அதுபோல அப்பர் பெருமானின் ‘அஞ்சாமைஎன்பதும் சிவமயமாக  இருக்கும் அவரது உயிரின் தன்மையாகவே விளங்கிக்கொண்டு இருப்பதால், அதன் ஆற்றலும் அளவு கடந்ததாகவே இருக்கிறது. ஆகையால்தான் சமணர்களால் ஏவப்பட்ட பட்டத்து யானை, சிவமாகவே வெளிப்பட்ட அப்பர் பெருமானின் அஞ்சாமையைக் கண்டவுடன் அஞ்சி விலகிச் சென்றது.

ஒவ்வொரு மானுட உயிரிலும் புலியின் இயல்பைப் போன்றுஅஞ்சாமைஎன்பது சிவனருளாகவே பொதிந்து கிடக்கும். அவன் அருளை உணர்ந்தால் எதையும் எதிர்கொள்ளும் துணிவு அனைவருக்குமே அவனருளால் கிட்டும் என்னும் பொருள்பட, திருக்குறள் வடிவில் வள்ளுவர் பெருமானும், தேவாரப் பதிகமாக அப்பர் பெருமானும் நமக்கு அளித்துள்ளார்கள்.

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

சாய்ராம்

Leave a comment