You Are That!- “Non-discrimination”

எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திரள்
அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி”  (221)


பஞ்ச பூதங்கள் அடங்கிய உயிர்திரள்கள் தோற்றத்திற்கு காலநிர்ணயம் உண்டு. ஆனால் பரம்பொருள் (நிர்குண ப்ரஹ்மம்தோற்றத்திற்கு அப்பாற்பட்டது


மணிவாசகப் பெருமான் அருளியபடி  அது 
ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி“.
அதாவது ஆதியென்றே இல்லாத அனாதியான
அதற்க்கு ஏது அந்தம்?

ஆங்காங்கே தோற்றத்திற்கு வந்த உயிர்திரள்கள் தங்கள் தங்கள் வழிபாட்டிற்காக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள ஒன்றேயான நாமரூபமற்ற பரம்பொருளுக்கு, ஓர் நாமமும் ஓர் உருவமும் கொடுத்து, அவரவர்களுக்கென தனித்தனி வழிப்பாட்டு முறைகளையும் உருவாக்கிக்கொள்ள காலப்போக்கில் அஃது  தனித்தனி மதமாகவும் மாறி…  


எம்மதம் எம்இறையென என்னும் உயிர்திரள்களாக மருவிவிட்டது. எனினும் பெரும் கருணையுள்ள பரம்பொருள் அம்மதம் அம்இறை என்றே அருளையும் பொழிந்து கொண்டிருக்கின்றது


அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” !!! 

Leave a comment