
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”.
பொதுப்பொருள்:
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பலஉயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்தஅறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்..
இங்கு வள்ளுவர் கூறும் “கிடைத்ததைப் பகுந்து” என்னும் பதத்தில், அஃது ஒவ்வொருவருக்கும் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என்பதினை ஆராய்ந்தால் ?
“தானே தானே பே லிக்காக் ஹ கானே வாலே நாம்!” என்பது ஹிந்தி பழ்மொழி. அதாவது ஒவ்வொரு தான்யத்தின் மீதும் அதை உண்பவரின் பெயர் முன்னரே எழுதப்பட்டுள்ளது என்பது இதன் அர்த்தம். அதாவது இயற்கை அன்னை வடிவாகவே விளங்கிக் கொண்டிருக்கும் தான்ய லட்சுமி ஒவ்வொரு தான்யத்தையும் அதை உண்பவரின் பெயரொடு சேர்த்தே விளைவிக்கிறாள் என்று பொருள். அவ்வாறு பேர் எழுதப்பட்ட தான்யத்தை அன்னலக்ஷ்மியாக விளங்கிக்கொண்டு, உரிய நேரத்தில் அவரவர்களுக்கு உண்ணும் உணவாக பகுத்து அளிப்பதும் அவளருலே என்பதும் புலனாகின்றது.
இதை உணரப்பெற்றவர்கள் மட்டுமே பல்லுயிரும் ஒம்பும்படியாக தமக்கு அன்னலட்சுமியின் அருளால் பகுத்து பிராசதமாக அருளப்பட்டதை அனைவருடனும் பகிந்துகொள்ள இயலும். இவ்வாறு வாழ்பவரின் வாழ்வேஅறம் செரிந்ததாக ஆகிவிடுவதால், இத்தகையோருக்கு நூலறம் என்று எதுவும் தனியாக எதவும் சொல்லப்படவில்லை.
வாழ்க தமிழ்🙏🏿 வாழ்க வள்ளுவம்🙏🏿

