“கடிவது மற”


“கடிவது மற” -ஆத்திச்சூடி
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு”.

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய
சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது என்பது இக்குறளின்
பொதுவிளக்கம்.

தீயானது ஒருவரை தீண்டிடின் அதனால் உருவாகும் விளைவுகள் அவரது தேகத்தின் வெளிப்புறத்தை காயப்படுத்தி, கண்களுக்கு தென்படாத வகையில் அவரது தேகத்தின் உட்புறத்திலும் பாதிப்பை உருவாக்கும். ஆயினும் தகுந்த மருத்துவ சிகிச்சைகள் மூலம் அத்தேகத்தின் உள்வெளியில் உள்ள இருபுற புண்களையும் குணப்படுத்திவிடலாம்.

ஆனால் எவரொருவர் தீயினும் மேலான கடும்சொற்களை கொண்டு தம் நாவினால் மற்றொருவரை காயப்படுத்தினால், அதன்பின் தம் தவற்றையுணர்ந்து அக்காயத்திற்கு அருமருந்தாக எவ்வளவு சமாதான முறைகளை எத்துனைமுறை கையாண்டாலும்….

அக்காயத்திற்கு உள்ளானவர் வெளிப்புற தோற்றத்திற்கு சமாதானம் அடைந்தவராக காணப்பட்டாலும், அவர்தம் உள்ளத்தில் நாவினால் (கடும்சொற்க்களால்) சுடப்பட்ட வடுவானது காலாகாலத்திற்கும் ஆறாமலே இருந்து கொண்டேயிருக்கும் என்னும் எச்சரிக்கையை பொருள்படுத்தி இக்குறளை வள்ளுவர் நமக்கு அளித்துள்ளார்.

சாய்ராம்

Leave a comment