ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு“. குறள்-354
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்து வகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை என்பது பொதுப்பொருள்.
எவரொருவரும் தம் உறக்க நிலையிலிருந்து விடுபட்டவுடன் அவர்தம்மால் முதன்முதலில் உணரப்படுவது, ஐம்புலன்களால் வடிவமைக்கப்பட்ட
அவரவர்களின் உருவேயாகும். இவ்வுணர்வை கொடுப்பது அவர்களின் உள்ளே மறைபொருளாய் பொதிந்து இருக்கும் “Pure Consciousness”எனும் மெய்யுணர்வே !
இம் மெய்யுணர்வின் இவ் அகவொளியின் மூலமாக வெளிப்படும் ஐம்புலன்களின் ஐயுணர்வே இவ்வுலகமாகவும் இஃதினை உணரும்
உணர்வாகவும் விரிவடைகிறது.அதுபோலவே விழிப்பு நிலையில் உள்ள ஒருவரை உறக்கம் கவ்வும் முன், முதன் முதலில் அவர் முன் மறையும் காட்சி இவ்வுலகமே. இஃதினை தொடர்ந்து ஐயுணர்வை தம்முள் அடக்கிக்கொண்ட இவ்வுருவும் மறைய, தூய மெய்யுணர்வே உறக்க நிலையில், ஆயினும் அஃது அறியப்படாமலேயே வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றது.இத்தூய மெய்யுணர்வே “நான்” என்பது. இஃது அறியப்படாது போயின், அறியப்பட்ட ஐம்புலன்களின் ஐயுணர்வாலும், ஐயுணர்வு கொண்டு அறிந்த இவ்வுலகாலும் எந்தவொரு பயனும், பயமற்ற உணர்வும் கிட்டாது என்னும் பொருள்பட வள்ளுவர் பெருமான் இக்குறளை நமக்கு வழங்கியுள்ளார்.

Ramana maharishi says:
Does an ornament of gold exist Apart from the gold? Can the body exist Apart from the Self?
The ignorant one thinks ‘I am the body’;
The enlightened knows ‘I am the Self’.
Ashtavakra Gita – Chapter: 2
As I alone give light to this body, so I do to the world, As a result the whole world is mine, or alternatively nothing is.
சாய்ராம்.