“கூடிப்பிரியேல்” ஆத்திச்சுடி
இங்கு அவ்வையார் நமக்கு எடுத்துரைப்பது பிரியவேமுடியாத தகுதியில் கூடுதல் என்பது இருக்கவேண்டும் என்றே ! வழக்கமாக ஒருவர் மற்றவரை சந்திக்க நேரிடும் பொழுது எப்படி இருக்கிறீர்கள் என்று பொதுவாக விசாரிப்பது வழக்கம் மற்றவர்(விசாரிப்பிக்கு உள்ளானவர்) சுபமான சூழ்நிலை சிந்தனைகளோடு கூடியிருப்பின் சுகமாய் உள்ளேன் என்றும் அசுபமான சூழ்நிலை சிந்தனைகளோடு கூடியிருப்பின் சோகமாய் உள்ளேன் என்றும் கூறுவர்.மானுட வாழ்க்கையில் சுபம், அசுபம் என்பது மாறி மாறி வந்து போய்கொண்டேயிருக்கும் ஒரு நிகழ்வு. ஆகையால் கூடுதலும் பிரிதலும் மாறி மாறி இருந்துகொண்டேயிருக்கும்.. எனவே அவ்வையின் “கூடிப்பிரியேல்“என்னும் வாக்கு இங்கு பொருந்தாது.
“ஒன்றை நினைத்து ஒன்றை மறந்து ஓடும் மனம் எல்லாம் நீ என்று அறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே“. என்பது தாயுமானசுவாமிகளின் பாடல்.
எனவே உயர்வு மற்றும் தாழ்வு (superiority and inferiority complex) தன்மை கொண்ட மனத்துடன் கூடி கூடி பிரியாமல் தாயுமான சுவாமிகளின் வாக்குப்படி எல்லாம் நீயே என்று இருக்கும் பராபரக்கன்னியாம் அந்த பராசக்தியுடன் கூடினால் பிரிதல் என்னும் சொல்லே இல்லாமல்போய் கூடிப்பிரியேல் என்னும் அவ்வைபிராட்டியின் வாக்குமெய்பிக்கப்பட்டுவிடும் !
சாய்ராம்

