You Are That!- “maker of falsehood to real”

“நிற்க கற்றல் சொல் திறம்பாமை”- கொன்றை வேந்தன்:50
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்“.

குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம் என்பது இக்குறளின் பொதுப்பொருள்.


இங்கு நன்மை பயக்கும் எனின் என்று வள்ளுவர் குறிப்பிடுவதை, யார் பொய்யுரத்தாலும்  அது நன்மையையே விளைவிக்கும் என்பதாக
பொருள் கொள்ளுதல் கூடாது. மாறாக எவரொருவர் தம் வாழ்நாள்முழுவதும் வாய்மையை எத்துனை இடர்பாடுகள் நேரிடினும்அதனின்நின்று ஒரு சிறிதும் பிறழாமல், வாய்மையை தன் உயிர் மூச்சாகவே கடைபிடித்து வாழ்கின்றாரோ

இத்தகையோரிடமிருந்து ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில், அவர்கள் அறிந்தோ அல்லது அறியாமலோ வாய்மைக்கு புறம்பான சொல் வெளிப்ப்படுமின்அவர்கள் அதுவரை கடைப்பிடித்து வந்த வாய்மையின் சக்தியால், பொய்மையும் நன்மை பயக்கும் தன்மை கொண்டதாய் மாறிவிடும்.  அதாவதுஅச்சொல்வாய்மையுள்ளதாகவே மாறிவிடும்.நிற்க கற்றல் சொல் திறம்பாமை“- கொன்றை வேந்தன்:50
சொன்ன சொல்லிலிருந்து மாறாத திறனும் இத்தகைய வாய்மையாளருக்கே வாய்க்கும்.

இதற்கு எடுத்துக்காட்டாக கீழ்கண்ட நிகழ்வினை எடுத்துக்கொள்ளலாம்
.

அபிராமி பட்டர் என்னும் சக்தி உபாசகர் திருக்கடையூர் என்னும் கோவிலில்  குடிகொண்டிருந்த அம்மையையே உண்மையென நிலை கொண்டிருந்த  சந்தர்ப்பத்தில், அங்கு வந்த தஞ்சையை ஆண்டு வந்த சரபோஜி மன்னரிடம் அம்மாவாசை தினத்தைபௌர்ணமி தினம் என்று தன்னை அறியாமல் மாற்றியுரைக்கஅவருக்காக வாய்மையே வடிவான அம்மை முழு நிலவாய்  வெளிளிப்பட்டு அப் பட்டரை நோக்கி, வாய் சோர்ந்து மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிறுவினோம்; தொடங்கிய அவ்வந்தாதியைத்  தொடர்ந்து முடிப்பாயாக என ஆணையிட்டு மறைந்ததாக வரலாறு உள்ளது.


அஃதின்றி பெயரளவுக்கு வாய்மையை அவ்வப்போது தன்னலம் பொருட்டே  கடைபிடிப்பவர்கள், எந்தவொரு சந்தர்ப்பத்தில் பொய்யுரைத்தாலும், அதனால் ஒரு நன்மையும் உருவாகாது, மாறாக அது பொய்சாட்சியாக மாறிவிடும் என்னும் எச்சரிக்கையோடு வள்ளுவர் பெருமான் இக்குறளை நமக்கு வழங்கியுள்ளார்.

சாய்ராம்

Leave a comment