முந்தி இருப்பச் செயல்“.
என்நோற்றான் கொல்எனும் சொல்“.
உலகியலில் ஒரு தந்தை எனப்படுபவர் தனக்கு பிறந்த மகனை நன்கு வளர்த்து ஆளாக்கி, உன்னத நிலைக்கு உயர்வுபெற எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தந்தையின் கடமையாகத்தான் சொல்லப்பட்டிருக்கின்றதே அன்றி இதில் வள்ளுவர் கூறும் “தந்தை மகற்காற்று நன்றி” எனும் நன்றி நவிலுதல் என்பது எவ்வாறு?
அதே போல் மகன் எனப்படுபவருக்கும், தன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தையை நல்விதமாக பேணி காப்பது என்பது
மகனின் நன்றிக் கடனாகத்தான் சொல்லப்பட்டுள்ளதேயன்றி இதிலும் வள்ளுவர் கூறும் “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி“ என்பது எங்கனம் ?ஆனால் பொய்யாமொழிப் புலவர் பொய்யுரைப்பாரோ?இதற்கு கீழ்காணும் புராணக்கதையினை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.மகாபாரதம் எழுதிய வேதவியாசரின் தந்தை பராசர மகரிஷி, சத்தியவதி என்ற பெண்ணுடன் படகில் பயணம் செய்கையில்,அந்த அம்மையாரிடம் இந்த உலகையே உய்விக்க ஒரு மகாபுருஷரை உருவாக்க யத்தனித்துள்ளேன். நீ என்னுடன் கூடி அக்கருவை உன் வயிற்றினில் சுமப்பாயாக எனக்கூற, அவ்வம்மையாரும் பரிபூரணமாய் சம்மதிக்க உருவானவரே வேதவியாசர்.அதாவது பராசர மகரிஷியின் மிக உயர்ந்த குறிக்கோளுக்கு, அவருடைய பிரதிநிதியாக
“அவையத்து முந்தி இருந்து செயல்படுத்தியவர்“ வேதவியாசர். ஆகவே தந்தையாகிய பராசர மகரிஷி மகனாகிய வேதவியாசருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளார். இதுவே “தந்தை மகற்காற்று நன்றி“ என்பதாகின்றது.
இவ்வாறு உலகம் போற்றும் தகுதியில் தன்னை உருவாக்கிய தந்தை பராசர மகரிஷிக்கு மகனான வேதவியாசர் ஆற்றிய உதவி என்பது,
இப்பேர்பட்ட மகாபுருஷரை பெற இவர் தந்தை என்ன புண்ணியம் செய்தாரோ என்று உலகமே வியக்கும்படி, தம்தந்தையின் பிரதிநிதியாக
“அவையத்து முந்தி இருந்து“ அவர்தம் குறிக்கோளினை திறம்பட செயல்படுத்தியது “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி“ என்பதாகின்றது.
இந்த புராண நிகழ்வுகள் உவமானத்திற்காக எடுத்துக்கொள்ளப் பட்டதேயன்றி,உவமேயம் என்பது தற்பொழுது இப்புவியில் வாழும் மனித குலத்திற்காக சொல்லப்பட்டதே. “விதை ஒன்று போட்டு சுரை ஒன்று வருமா “என்பது தமிழ் பழமொழி.அதாவது தந்தை என்னும் ஸ்தானத்தில் இருந்து முறையாக விதைக்கப்படின்,அது மகனாகி நல்ல பலன்களை கொடுக்கும் என்பதில் ஒருவித ஐயமும் இல்லை. வள்ளுவப் பெருமான் அருளியபடி
“தந்தை மகற்காற்று நன்றியும்” , “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவியும்“
அதாவது இத்தகைய பரிமாற்றங்கள் இப்பூவுலகில் நிகழுமேயானால் இது பூலோக வைகுண்டமாக மாறிவிடாதோ !
எங்கேயானும் பொய்யாமொழிப் புலவர் பொய்யுரைப்பாரோ !!
சாய்ராம்

