You Are That!- “Non differentiator”

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்
குறள் 851
எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீயப் பண்பை வளர்க்கும் நோய் இகழ் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர் என்பது இக்குறளின் பொதுப்பொருள்
பகலென்னும் பதத்திற்கு தனக்கு அன்னியமாக பார்த்தல் என்று பொருள். இத்தகைய பார்வையை ஒரு பண்பற்ற தன்மை என்றும் அது தொற்று நோயைபோல எல்லா உயிர்களிடத்தும் வேகமாக பரவக்கூடியது என்றும் எச்சரிக்கிறார்.மேலும் இத்தகைய கொடிய நோய் ஒருவரை தொற்றிடின் அது அவர்களுக்குள் விரோதம்….
(இகல் என்னும் பதத்திற்கு விரோதம் என்று பொருள் ) என்னும் குணத்தை விதைத்து உடல் முழுவதும் பரவ செய்து தாம் குடிகொண்டுள்ள தேகத்தை சுவடே தெரியாதபடி அழித்து சாம்பலாக்கிவிடும்.
அதற்க்குஅருமருந்தாகபகவத்கீதையில்தியானயோகத்தில் 31 ஆம் ஸ்லோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அருளியபடி
உள்ளது ஒன்றே என்று உறுதிப்பூண்டு எல்லா உயிர்களிலும் இருக்கிற என்னைபோற்றும் யோகி எப்பாங்கில் இருப்பினும் என்னிடத்தே இருப்பவன் ஆகிறான்
என்று ஒருவன் இருப்பான் ஆகின் விரோதம் என்னும் கொடிய தொற்றுநோய் இத்தேகத்தை தாக்காவண்ணம் காப்பாற்றிகொள்ளலாம்.

புத்தரின்போதனை

வசல சுத்தங் -1
01.கோபம், பழியுணர்வு, தீய எண்ணம், பொறமை, தவறான கண்ணோட்டம் மற்றும் ஏமாற்றும் போக்கு ஆகியவற்றை உடைய ஒருவனே தீண்டத்தகாதவன் ஆவான்.
02.தாவரங்களுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
விலங்குகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
பறவைகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
மீன்கள், பூச்சிகள், பாலுட்டிகள் ஆகியவற்றினிடையே
பல வகைகளும் இனங்களும் உள்ளன.
ஆனால் மனிதரிடையேவேறுபாடே இல்லை இல்லை

சாய்ராம் 

Leave a comment