You Are That!- “A knowable divine parent”

ஔவையார்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்கள்
நம் முன்னால் இருந்து அறியக்கூடிய தெய்வங்களாக அன்னையும் பிதாவும் விளங்குகின்றனர்கள் என்கின்றது அவ்வையின் ஆத்திச்சுடி.
அவ்வாறு அவர்கள் தெய்வங்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகள் அவர்களும் தெய்வங்களாகத்தானே இருக்கவேண்டும், ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லையே ஏன் ?

சிவனும் பார்வதியும் தெய்வங்கள்தாம் ! அவர்களின் குழந்தைகள் அவர்களும் தெய்வங்கள்தாம்!!

ஆனால் மஹாவிஷ்ணுவும் பூமாதேவியும் தெய்வங்கள்தாமே,பின் ஏன் அவர்களுக்கு நரகாசுரன் பிறந்தான் ? காரணம் மஹாவிஷ்ணு, ஹிரன்யாஷகன் என்ற அசுரனை வதம் செய்தபின், தன்னில் இருந்த அசுரத்தனம் மறையும் முன்பே அந்த எண்ணங்களோடே பூமாதேவியுடன் இருந்ததின் காரணம் நரகாசுரன் பிறந்தான் என்று புராணம் சொல்கிறது.

இந்த புராணகதை நமக்கு உணத்துவது எண்ணங்களின் வலிமையை அகத்திய மஹரிஷியிடம் அவரது மனைவி லோபாமுத்திரை தனக்கு

ஒரு பிள்ளைபேறு வேண்டும் என்று வினவ,அதற்கு அகத்திய மஹரிஷி உனக்கு எத்தகைய மகன் வேண்டும் என்று கேட்கிறார். இதிலிருந்து தாயும் தந்தையுமாக ஆகப்போகின்றவர்களுக்கு ஒரு குழந்தை உருவாகும் முன்பிலிருந்தே பொறுப்பானது விதிக்கப்பட்டுள்ளது என்பது விளங்குகின்றது.

ஆகையால் தெய்வீகமான எண்ணங்களே ஒரு தாயையும், தந்தையையும் தெய்வங்களாக மாற்றுகின்றன.அவர்கள் சக்தியும் சிவனுமாக இருந்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் சுந்தரமாகத்தான் இருக்கும்.

அவ்வாறு சுந்தரமயமாய் விளங்கக்கூடிய மகனுக்கு மட்டுமே அவனை பெற்றெடுத்த அன்னையும்,பிதாவும் முன்னால் இருந்து அறியக்கூடிய தெய்வங்களாக விளங்கமுடியும்.

சாய்ராம்

Leave a comment