You Are That!- “obedient to obedience”

“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து”. குறள் 125:
பணிவு உடையதல், ஒழுகுதல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும்;
அவர்களுள் சிறப்பாகச் செல்வர்க்கே மற்றொரு செல்வம் போன்றதாகும் என்பது பொதுப் பொருளாகும்
பணிதல் என்னும் குணம் பொருட்செல்வம் உள்ளவரிடத்தில் குடிகொண்டு இருப்பதினால் மற்றவர்களுக்கு கிடைக்கப்பெறும் பயன் நிரந்தரமானதாக இருக்காது. பொருட் செல்வம் என்பது வந்து போகும் தன்மையுடையது. அவ்வாறே அதன் பயனும் இருக்கும். மாறாக,செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை“.

என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப செவிவழி செல்வத்தை தரவல்ல கல்விச் செல்வத்தை தன்னகத்தே கொண்டவரிடத்தில் தன்னடக்கம் நிறைந்திருந்தால், அந்தகைய பணிவின் காரணம் அநேகர் அவரை நாடி வந்து, அவரிடம் உள்ள அருட் செல்வதை தம் தம் செவிவழி செல்வமாக அடையப்பெற்று தாங்களும் பயனுருவார்கள். ஆகவே,

செல்வர்க்கே செல்வம் தகைத்து
என்னும் வள்ளுவரின் வாக்கிற்கேற்ப கல்விச் செல்வத்தை தன்னகத்தே கொண்டவரிடம் உள்ள பணிவின் காரணம்,செவிவழி செல்வமும்அவரை வந்தடையும். மேலும் இங்கு எல்லோருக்கும் நன்றாம் பணிதல் என்று வள்ளுவர் குறிப்பிடுவது, இத்தகைய செவிச் செல்வத்தை அடைய வேண்டுபவர்க்கும் பணிதல்என்பது மிகவும் முக்கியம் என்னும் பொருள்படவே வள்ளுவர் இக்குறளை நமக்கு அருளியுள்ளார்.

சாய்ராம்.

Leave a comment