Tag: திருவாசம்
Tag: திருவாசம்
-
“எய்ப்பு இடத்து சிக்கெனப் பிடித்தேன்”
திருவாசகம் “பிடித்த பத்து”-5 “சிவபெருமானே! எய்ப்பு இடத்து, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? எய்ப்பு: என்பதற்கு ஒடுக்க நிலை என்றும் ஒரு பொருள் உள்ளது. மனிதப் பிறப்பில் நிகழும் ஒடுக்க நிலை என்பது அவரவர்களின் ஆழ்ந்த நித்திரை நிலையேயாம். மனமும் ஒடுங்கப்பெற்ற அந்நிலையிலேயும் “சிவபெருமானே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே” ? என்பதாக மணிவாசகப் பெருமான் சொல்லிய பாட்டின் பொருள் இது எனக்கொள்ளலாம். திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
