Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
Tag: அருட்பெருஞ்ஜோதி அகவல்
-
Pure Grace
1.அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால் அருள்நலம் பரவுகென்று அறைந்த மெய்ச்சிவமே 2.அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை அருளுற முயல்கவென்று அருளிய சிவமே 3.அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம் இருள்நெறி யென எனக்கு இயம்பிய சிவமே 4.அருள்பெறில் துரும்பும் ஓர்ஐந்தொழில் புரியும் தெருளிது எனவே செப்பிய சிவமே 5.அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம் மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே 6.அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம் மருட்சுகம் பிறஎன வகுத்த மெய்ச்சிவமே 7.அருட்பேறு அதுவே அரும்பெறல் பெரும்பேறு இருட்பேறு அறுக்கும் என்றியம் பியசிவமே 8.அருள்தனி வல்லபம் அதுவே எலாஞ்செய் பொருள்…
